என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோதலை தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது தாக்குதல்

- 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர்.
- தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சின்னராஜ், அவர் சம்பவத்தன்று இரவு ஏட்டு திருநாவுக்கரசுடன் குனியமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கோவைப்புதூர் ஏ மைதானத்தில் தகராறு நடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் எட்டு திருநாவுக்கரசுடன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் மீது மோத வந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
ஆனால் ஏட்டு திருநாவுக்கரசு மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறியதால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். காலில் படுகாயம் அடைந்த ஏட்டு திருநாவுக்கரசை மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடந்துள்ளதும், அதில் தாக்கப்பட்ட ஒரு மாணவரின் நண்பர்கள், இரவு சம்பவ இடத்தில் மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அதனைக் வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.