என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் - 14, 15-ந்தேதிகளில் நடக்கிறது
- பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது
- ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்கள்-251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-15 என மொத்தம் உள்ள 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 18-ந்தேதி வெளியிடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு முன்னீர்பள்ளம் மற்றும் தாழையூத்து போலீஸ் நிலையங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு அந்த வாகனங்கள் தாழையூத்து போலீஸ் நிலைய வளாகத்தில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பண மாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வருகிற 12-ந்தேதி கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை முன்கூட்டியே வந்து பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.