என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
சுரண்டை நகராட்சியில் விழிப்புணர்வு கூட்டம்
- விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் மண்டல இயக்குனர் அறிவுரை யின்படி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் உரிமம் பெறுதல் தொடர்பான விவரங்கள் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.
Next Story