என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மாணவிகள் பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
- மாணவர்கள் அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளு க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகிருபா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா பங்கேற்று பேசுகையில், மாணவிகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு, தற்பொழுதிலிருந்து பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வியில் எந்த இலக்கை அடைய முயற்சி செய்கிறோமோ, அதை நோக்கி ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டும்.
அதற்கென நேரம் ஒதுக்கி குறிக்கோளோடு செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதோடு, நமக்குள்ளே, கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாமே தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றார். இதில் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.