என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/23/1903383-2gh.webp)
உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன்,மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
நெல்லை:
உலக வெண்புள்ளி தினம் நாளை மறுநாள் (25-ந்தேதி) அனுசரி க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் வெண்புள்ளி நோய் முகாம் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி யாக வெண்புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் மற்றும் தோல் நோய் சிறப்பு மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகை களை ஏந்திச் சென்றனர். பேரணி மருத்துவமனை முன்பு தொடங்கி மருத்துவ மனை வளாகம் முழுவதும் சென்று நிறைவு பெற்றது.பேரணியில் அரசு மருத்துவ மனை மருத்து வர்கள், செவிலி யர்கள் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.