என் மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பேரணி தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து அண்ணாசாலை வழியாக மாவட்ட மைய நூலகம் வரை நடைபெற்றது.
- பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நூலகம் அலுவலகம் சார்பில் ராஜாராம் மோகன்ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் முன்னிலை வகித்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது :-
ராஜாராம் மோகன் ராய் 250- வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நூலக அலுவலகம் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை சார்பில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து அண்ணாசாலை வழியாக மாவட்ட மைய நூலகம் வரை நடைபெற்றது.
இப்பேரணியில் தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன், தாசில்தார் சக்திவேல், கண்காணிப்பாளர் கதிரேசன், நூலக ஆய்வாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட மெய்யன் நூலகர் முத்து, நகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.