என் மலர்
உள்ளூர் செய்திகள்
சக்தி வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- மாணவ, மாணவிகளுக்கு சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதலின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
- மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சுமதி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சுற்றுப்புறத்தூ ய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் பிரியங்கா வரவேற்று பேசினார். சுற்றுப்புறத்தூய்மை விழிப்புணர்வு கருத்தரங்கி ற்கு மாநகர சுகாதார நல அலுவலர் சுமதி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதலின் அவசியத்தையும், பிளா ஸ்டிக் தவிர்த்தலை பற்றியும் விளக்கம் அளித்தனர். பின்னர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தி ருப்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதன்பின்னர் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய சிறப்பு வாசகங்கள், பிளா ஸ்டிக் குப்பைகள் தவிர்த்த லின் அவசியம் பற்றிய வாசகங்கள், பயனற்ற பொருட்க ளிலிருந்து பயன் உள்ள பொருட்கள் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சுமதி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழிப்புணர்வு கருத்தர ங்கில் மேற்கு மண்டல தூய்மை பரப்புரை யாளர்கள் சந்தனக்குமார், அர்ஜூன், சுப்பிரமணியன், ராஜகோபால், முருககுமார், இசக்கிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை உதயம்மாள் நன்றி கூறினார்.