என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தை சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தை](https://media.maalaimalar.com/h-upload/2022/07/17/1730767-babydeath.jpg)
X
சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தை
By
மாலை மலர்17 July 2022 12:03 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது.
- பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை உடல் குளத்தில் வடக்கு கரை ஓரம் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விரைந்தனர். பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் குழந்தையை வீசி சென்றது யார் ?பிறந்ததால் வீசி சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X