என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்பகோணம் பகுதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
- பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.
கும்பகோணம்:
தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் என பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.
இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் அதிகாலை முதலே திடலில் குவிந்தனர்.
சரியாக 7.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நடத்திய இமாம்கள் ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.
இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்ராஹிம் நபி அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் கால்நடை போன்ற பிராணிகளை அறுத்து இறைவனுக்காக குர்பானி என பலியிடுகின்றார்கள் என்றார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.