என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்.
செங்கோட்டையில் வழுக்கு மர போட்டி
By
மாலை மலர்20 Aug 2022 2:51 PM IST

- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- வழுக்குமர போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்கு மரம் ஏறினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் சின்ன சிறு குழந்தைகள் கிருஷ்ணன் வேடம் அணிந்து கையில் புல்லாங்குழலுடன் காட்சி தந்தனர். அதனைத்தொடர்ந்து இளைஞர்களுக்கான வழுக்குமர போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்கு மரம் ஏறினர்.பெரியவர்கள் மற்றும் விழா கமிட்டியினர் விழாவில் கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளுடன் பரிசு தொகையினையும் வழங்கினர்.
Next Story
×
X