என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வள்ளியூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வள்ளியூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/03/1976336-2plasticfine.webp)
X
வள்ளியூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
By
மாலை மலர்3 Nov 2023 2:19 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வள்ளியூர் பஸ் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
- சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர்:
வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வள்ளியூர் பஸ் நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம், செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Next Story
×
X