என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி முன்பு ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
- மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் சிவா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் ஓசூர் கிளை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் சந்திரன் கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார்.
இதில் மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சியில் 35,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417 ஆக குறைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், ஓசூர் மாநகராட்சியில் சுமார் 10 வருடங்களாக தற்காலிகமாக பணி செய்த 88 பேருக்கு பென்சன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.