search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகம்பட்டி ஊராட்சியில்  சாலை அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பில் பூமி பூஜை
    X

     பிச்சனம்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மதியழகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்த காட்சி.

    நாகம்பட்டி ஊராட்சியில் சாலை அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பில் பூமி பூஜை

    • ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது.
    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் நாகம் பட்டி ஊராட்சி, பிச்சனம் பட்டி பகுதியில் அனைத்து அண்ணா மறுலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குண வசந்தரசு, (கிழக்கு), நரசிம்மன் (தெற்கு ), மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கதிர்வேல், நாகம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதய குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான பூபதி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் முருகன், விஜியகுமார், மாவட்ட ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரஜினி சரவ ணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், ஒன்றிய கலை இலக்கிய அணி செயலாளர் பால் மூர்த்தி, மாடஹள்ளி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×