என் மலர்
உள்ளூர் செய்திகள்
4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காட்டெருமை உருவம் கொண்ட பாறைக் கீரல் ஓவியம்
- வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீரலாக இருப்பதை கண்டறிந்தார்.
- இது ஒரு காட்டெரு மையின் உருவமாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், சதானந்த கிருஷ்ணகுமார் மற்றும் ஐகுந்தம் வெங்கடாஜலபதி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைப்பெற்றுவரும் மயிலாடும்பாறையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள ஐகுந்தம் அருகில் உள்ள மூலைக்கொல்லை பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீரலாக இருப்பதை கண்டறிந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:-
இந்த ஓவியம் பாறையில் கல்லால் கொத்தி தேய்த்து உருவாக்கப்பட்ட பாறைக் கீரல் உருவம் ஆகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கலாச்சாரத்தை சேர்ந்த பாறைக் கீரல் இது. இது போன்ற விலங்கின் பாறைக் கீரல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை யாகும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இத்தகைய விலங்கு உருவ பாறைக் கீரல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது ஒரு காட்டெரு மையின் உருவமாகும். சுமார் 3.5 அடி நீளம் மற்றும் 4.8 அடி உயரமுடையதாக உள்ளது. கீரல் சுமார் அரை முதல் ஒரு அங்குல அகலமுடையதாய் உள்ளது. இக்கீரல் நன்கு தேய்த்து வழவழப்பா க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் நாகராஜ், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்ப டுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், வரலாறு ஆசிரியர் ரவி, சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், அறிஞர், தம்பிதுரை, அஸ்லாம், தங்கமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.