என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு ரத்தவகை கண்டறியும் முகாம்
- நர்சிங் மாணவிகள் பங்கேற்று பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
- முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தவகை கண்டறியும் முகாமை நடத்தியது.
ரோட்டரி சங்கத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.
செயலாளர் கே.சுரேஷ்குமார், முன்னாள் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமினை தொடங்கிவைத்தார்.
தனியார் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் மதியழகன் தலைமையில் நர்சிங் மாணவிகள் பங்கேற்று பரிசோ தனைகள் மேற்கொண்டனர்.
ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன் ,சுப்பிரமணியன், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியின் முதல்வர் இராமலிங்கம், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலர்கள் கந்தசாமி, எஸ்.கே.ஆர்.மணிகண்டன் பங்கேற்றனர்.
முடிவில் நாட்டு நலப்பணி த்திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.