என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த காட்சி.
கோவை சம்பவத்தை தொடர்ந்து நெல்லையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
கோவை கார் வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஜவுளிக்கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய பஸ்நிலையத்தில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம், ஏட்டுகள் துரை, காளியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நீண்டநாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து அது குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் பாளை பஸ் நிலைய பகுதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடம், பயணிகள் இருக்கை, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.
மேலும் டவுன், வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளின் வாகன நிறுத்தங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.