என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்- 92 பயனாளிகள் பயனடைந்தனர்
- முகாமை மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 'பிங்க் அக்டோபர் 2022' கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக், ஜெரின், விக்னேஷ்,பொது மருத்துவர்கள் லதா,கீதா, மல்லிகா,ஸ்கேன் மருத்துவர் நாகஜோதி, காது மூக்கு தொண்டை நிபுணர் மணிமாலா, மகப்பேறு மருத்துவர்கள்,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, பயிற்சி மருத்துவர்கள் மேக்லி, எஸ்தர்,மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகளான மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல் போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தென்காசி மாவட்டத்தை சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்து வர்கள்,பொது மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.
முகாமில் சுமார் 92 பயனாளிகள் பயன் பெற்றனர்.அனைவருக்கும் மார்பக பரிசோதனை செய்து, ஸ்கேன் மற்றும் மாமோ கிராம் செய்து சிகிச்சை அளி க்கப் பட்டது. அனைத்து ஏற்பாடு களை யும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். என்.ஹச்.எம் நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.