என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மலைகிராம மக்களை அலைக்கழிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்

- கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் பொதுமக்கள் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
- புதிய சிம்கார்டுகள், சிம்கார்டு மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.
பெரும்பாறை :
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் பொதுமக்கள் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சேவையில் தடங்கல் ஏற்பட்டால் புகார் அளிக்க வத்தலக்குண்டு பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சுமார் 43 கி.மீ பயணித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அங்கு சென்றாலும் புதிய சிம்கார்டுகள், சிம்கார்டு மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஊழியர்கள் முறையான பதில் சொல்லாமலும், தகாத வார்த்தைகளால் பேசியும் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். மேலும் ஆவணங்கள் சரியில்லை என திருப்பி அனுப்பபடுவதால் கூலி வேலை செய்யும் கிராமமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிம்கார்டு தட்டுப்பாடின்றி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.