என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் பூங்காவில் குவியும் பட்டாம்பூச்சிகள்-சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி

- குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் மலர்கள் நடவு செய்யப்பட்டது.
ஊட்டி,
குன்னூரில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பட்டாம்பூச்சிகள் வருகை புரிய தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்திய குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
அந்தப் பூங்கா பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது புதிய பூங்காவாக மாற்றப்பட்டு குப்பை மேலாண்மை பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும் பூங்காவில் மலர்கள் அதிக அளவில் மலர்ந்து உள்ளதால் பூங்காவிற்கு பட்டாம் பூச்சிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த பட்டாம்பூச்சி வருகையை காண உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.