search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைத்தேர்தல் தோல்வி: எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இடைத்தேர்தல் தோல்வி: எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    • 'எட்டு தோல்வி எடப்பாடி' என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
    • இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை :

    நெல்லை மாவட்டம் திசையன்விளை, இட்டமொழி, மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 'எட்டு தோல்வி எடப்பாடி' என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், 'எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாக எட்டு தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது' என்றும், 'எட்டு தோல்வி எடப்பாடியாரே! உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்!' என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 8 தேர்தல்கள் விவரமும் அதில் இடம் பெற்றுள்ளது.

    இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×