என் மலர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் வன விலங்குகளை கண்காணிக்க பொருத்தப்பட்ட காமிராக்கள் திருட்டு
- வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி காமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
- வனகாப்பாளர் நாகராஜன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏராளமான தானியங்கி காமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம் உலிக்கல் சுற்றில் வனக்காப்பாளராக பணியாற்றி வருபவர் நாகராஜன் (வயது37).
சம்பவத்தன்று இவர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் வனப்பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது கல்லாறு புளியமரக்காடு உப்பு மண்குழி குன்னூர் ஆற்றுப்படுகையில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்கள் திருட்டு போயிருந்தது. இதனை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வனகாப்பாளர் நாகராஜன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.