என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி
Byமாலை மலர்5 Nov 2022 3:02 PM IST
- முருகேசன் தச்சு தொழிலாளி வீட்டில் முரு கேசன் பராமரிப்பு பணியை செய்தார்
சேலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகு தியை சேர்ந்தவர் முரு கேசன் (வயது 70). தச்சு தொழிலாளி. இவர் திருச்செங்கோடு அருகே பாண்டீஸ்வரர் கோவிலில் தங்கி அப்பகுதியில் தச்சு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பாண்டீஸ்வரர் கோவில் பின்புறம் ஜெகதீசன் என்பவருடைய வீட்டில் முரு கேசன் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் உள்ள தகரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி முருகே சன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X