என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நீலகிரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவும்- மாவட்ட செயலாளர் வேண்டுகோள் நீலகிரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவும்- மாவட்ட செயலாளர் வேண்டுகோள்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/31/1890391-untitled-1.webp)
நீலகிரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவும்- மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி கொண்டாடப்பட உள்ளது.
- கலைஞர் புகைப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி நடக்க உள்ளது.
இதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அறிவுரை வழங்கி உள்ளனர்.
திராவிட இயக்கத்தை கண் இமைப்போல பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா, கழக தோழர்கள் வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டிய பொன்நாள். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நகர-ஒன்றிய-பேரூர் –ஊராட்சி பகுதிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து, கட்சிக்கொடியேற்றறி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
பொது இடங்களில் கலைஞர் புகைப்படத்தை அலங்கரித்து வைத்து, கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஜூன் 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதில் நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
கலைஞருக்கு மலர் அஞ்சலி செய்வதோடு, அன்னாரின் அடிச்சுவட்டை பின்பற்றி, கழகத்தை காத்து வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகம் உயர உழைப்போம் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.