என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

- இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பூதலூர்:
செங்கிப்பட்டி-பூதலூர் சாலை புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் இளைஞர்ளுக்கான உதவித் தொகையுடன் லேத் ஆபரேட்டர், சிஎன்சி ஆபரேட்டர், டர்னிங் ஆகிய இலவச தொழிற்பயிற்சிகள் 3 மாத காலம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற 51 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதல் கட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர் ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சியாளர் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் லேத் ஆபரேட்டர் பயிற்சியிலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்சின்சி ஆபரேட்டர் டர்னிங் பயிற்சியிலும் சேரலாம்.
இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்குரிய உதவித்தொகை வரவு வைக்கப்படும்.
பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும் என்று கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தெரிவித்தார்.