என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நெல்லை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க நகை பறிப்பு நெல்லை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க நகை பறிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/08/1818776-chain-snap.webp)
X
நெல்லை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க நகை பறிப்பு
By
மாலை மலர்8 Jan 2023 1:41 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தங்கம்மாள் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார்.
- பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தங்கம்மாள்(வயது 70).
இவர் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த கோபூஜையில் பங்கேற்றபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X