என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநவமி விழா முன்னிட்டு கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்
    X

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.

    ராமநவமி விழா முன்னிட்டு கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்

    • மார்ச் 22ஆம் தேதி அன்று காலை கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
    • இரவு இந்திர விமானத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தென்னகத்தின் அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த மார்ச் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இதையொட்டி மார்ச் 22ஆம் தேதி அன்று காலை கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து கோவில் பட்டாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைத்தனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு ராமர், சீதை, லெட்சுமணன், ஆஞ்சநேயருடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து இரவு இந்திர விமானத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து கடந்த 29-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது இன்று. ராமநவமியை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சாமி தேரில் எழுந்தருளி, காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×