என் மலர்
உள்ளூர் செய்திகள்
மருத்துவக்குடி திரவுபதி அம்மன் கோவிலில் தேரோட்டம்
- வீரசோழன் ஆற்றிற்கு திரவுபதி அம்மன் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே மருத்துவக்கு டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஆடுதுறை வீரசோழன் ஆற்றிற்கு திரவுபதி அம்மன் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடந்தது.
இதை தொடர்ந்து, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அம்மன் எழுந்தருளினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மன் தேரை தோளில் சுமந்து சென்றனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.மேலும் பல பக்தர்கள் அழகு காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், தூக்குத்தேர் கோவிலை வந்தடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூக்குத்தேர் தீமிதி திருவிழாவில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், பேரூராட்சி கவுன்சிலர் ம.க.பாலத ண்டாயுதம், நாட்டாண்மை கள் கே. அசோக்குமார், ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.