என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி விநாயகர் கோவிலில் சதுர்த்தி தேர் பவனி
- கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
- அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக்டன் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.
முன்னதாக கோவிலில் அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் தேர் பவனி நடந்தது. இது கேர்பட்டா, காமராஜர்சதுக்கம், ராம்சண்ட் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் இடக்கல் போஜராஜ் அன்பரசு ராமச்சந்திராரெட்டி, ஜெயக்குமார், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story