என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சோழமண்டலம் அளவிலான செஸ் போட்டி
- சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.
- 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றுனர்.
தரங்கம்பாடி:
சோழமண்டலம் அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.
இதில் சோழமண்டலத்துக்குள் தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர.
வெற்றி பெறும் முதல் 10 இடங்களை பிடிக்கின்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக செயலர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் அசோக், துணைச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆனந்த் தமிழ் வேந்தன் வரவேற்றார். ஏராளமான மாணவ.மாணவியர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர்.
Next Story