என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா - முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த குருவானவர் ஸ்டீபன் லயனல் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் முன்னாள் மேயரும், மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரு மான விஜிலா சத்தியானந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், உதயகுமார், வட்டார தலைவர் பாக்கிய குமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், நிர்வாகிகள் குறிச்சி கிருஷ்ணன், கே.எஸ்.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.