என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு. சங்கத்தினர்.
தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்22 July 2022 3:00 PM IST

- சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.
- தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
நெல்லை:
நெல்லை தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டி.என்.எஸ்.டி.சி. மண்டல தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.
நெல்லை மண்டல பொதுச்செயலாளர் ஜோதி, மின்ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில் தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், பணி செய்யாமல் ஊதியம் பெறும் சில டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் குமரகுருபரர் நன்றி கூறினார்.
Next Story
×
X