என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திசையன்விளை அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்கு திசையன்விளை அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/09/1878529-3thisayanvilaiclash.webp)
திசையன்விளை அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்கு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஈனமுத்துக்கும், சுடலைக்கும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- ஈனமுத்துவை அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து(வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுடலை(28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஈனமுத்துவை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி பார்வதி, சுடலை, அவரது மனைவி சுப்புலெட்சுமி, பானு ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் சுடலை தன்னை ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.