என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையத்தில் தூய்மை பணி
    X

    ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

    • நடைபாதைகளில் உள்ள செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
    • நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

    சீர்காழி:

    விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமை வகித்தார். ரெயில் நிலைய அதிகாரி முன்னிலை வகித்தார்.

    சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் இருந்த செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.

    கடும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    நிகழ்ச்சி முடிவில் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எதிரியான பாம்புகளை அடித்து கொல்லாமல் பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து கையாளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பாம்பு பாண்டியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், விழுதுகள் இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுதுகள் இயக்கத்தின் காமராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×