என் மலர்
உள்ளூர் செய்திகள்
தென்னை விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- வேளாண் அதிகாரி தகவல்
- தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ. 40 வீதம் மானியம் பெறலாம்.
- உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி ( பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
தென்னை சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் 7500 எக்டருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படு கின்றன. இவற்றை வெட்டி அப்பறப்ப டுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூபாய் 1000 வீதம் அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.
தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூபாய் 40 வீதம் மானியமும் அதிகபட்சமாக ஒரு எக்டரில் 100 தென்னங்கன்றுகளுக்கு மானியம் பெறலாம்.
தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை செயல்படுத்திட முதலாம் ஆண்டு ரூ.8,750/ எக்டர், இரண்டாம் ஆண்டு ரூ.8,750 எக்டர் மானியமாக பெறலாம்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.