என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாபநாசத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
- பாபநாசம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல் நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகள் குறித்தும், தொடக்க பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், சக்கரப்பள்ளி ஊராட்சியில், வாலன் சுலைமான் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும், ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணிகள் குறித்தும், அய்யம்பேட்டை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அங்காடியில் வழங்கப்படும் உணவு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும், கடன் உதவி குறித்தும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பத்தப்பட்ட அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டாச்சியர் பூங்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா நஸ்ரின், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ரெஜியா சுல்தானா, பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் முருகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.