search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரத்தி ற்குட்பமேடு ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கீழசாலை, அஞ்சமன்னை முதல் முக்காவட்டம், நாராயணபுரம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து காரைமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் மேலசாலை வாய்க்கால் தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும், திருவாலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாலி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்டம் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு முகாம் அலுவலர்கள், தன்னார்வலர்களிடம் குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.திருவாலி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீர்காழி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை,முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக பொறியா ளர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ வன்,சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×