என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி. அருகில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றினார்

- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினவிழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் 71 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் செந்தில் ராஜ் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறை யினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போலீசாருக்கு சான்றிதழ்
அந்த வகையில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி டி.எஸ்.பி. சுரேஷ், திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. சம்பத், கோவில்பட்டி மேற்கு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எட்டையாபுரம் இன்ஸ் பெக்டர் ஜின்னா பீர்முகமது உட்பட 60 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட னர்.