என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சமுதாய வளைகாப்பு விழா
- விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
- சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.
அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.
விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.