என் மலர்
உள்ளூர் செய்திகள்

வணிகர்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.
மின் கட்டண உயர்வை கண்டித்து வணிகர்களிடம் கையெழுத்து பெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள்
- மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர்.
நெல்லை:
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி வணிகர்களிடமிருந்து கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட பா.ஜனதா வர்த்தகப்பிரிவு துணை தலைவர் குரு மகராஜன் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வர்த்தகப்பிரிவு மாநில செயலாளர் அசோக் குமார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர். அதனைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை வடக்கு, தெற்கு, தூத்துக்குடி தெற்கு, வடக்கு , தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.