என் மலர்
உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி விற்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
- மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
- டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது
நெல்லை:
மகாவீர் ஜெயந்தியை யொட்டி நெல்லை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இறைச்சி கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இறைச்சி விற்பனை
இதையடுத்து மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில கடைகளில் முன்பக்க வாசலை மூடிவிட்டு சட்ட விரோதமாக பின்பக்க வாசல் வழியாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கமிஷன ருக்கு புகார் சென்றது.
அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பினாயில் ஊற்றி அழிப்பு
அப்போது டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுகாதார அலுவலர் இளங்கோ பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.