search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்குகள்ளிகுளம் மாதாமலை கெபிக்கு லிப்ட் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    ‘லிப்ட்’ அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தெற்குகள்ளிகுளம் மாதாமலை கெபிக்கு 'லிப்ட்' அமைக்கும் பணி தொடக்கம்

    • தெற்குகள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்து தம்பாதம் பதித்த மலை கெபி அமைந்துள்ளது
    • தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்த சென்னை தொழிலதிபர் சாமிநாதன் மலை கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணியை தன்சொந்த செலவில் செய்து கொடுக்க முன்வந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்து தம்பாதம் பதித்த மலை கெபி அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்ல பாறையை செதுக்கி படிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த படிகள் வழியாக ஏறிச்சென்று மாதா காட்சி கொடுத்த கெபியையும், பாதம் பதித்த இடத்தையும் தரிசிக்க சிறுவர்கள் மற்றும் முதியவர்களால் இயல வில்லை. எனவே மாதா காட்சி கொடுத்த மலைக்கு செல்ல மின்தூக்கி (லிப்ட்) அமைக்கவேண்டும் என கோரிக்கை முதிய வர்கள் மத்தியில் நெடுங்காலமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்த சென்னை தொழிலதிபர் சாமிநாதன் மலை கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணியை தன்சொந்த செலவில் செய்து கொடுக்க முன்வந்தார். இதனை அடுத்து மலைக்கெபிக்கு மின்தூக்கி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அதிசய பனிமாதா கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை தாங்கினார். பங்குதந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தொழிலதிபர் சாமிநாதன் அடிக்கல்நாட்டி மின்தூக்கி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மும்பை களிகை சங்க தலைவர் மைக்கிள் பிரகாசம், செயலாளர் அந்தோணி சீலன், முன்னாள் செயலாளர் லாசர், சுரேஷ், கள்ளிகுளம் புனித பேரரசு, கவுதம், ஆன்றோ, சென்னை களிகை சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் தங்கதுரை, பொருளாளர் ஜூலியஸ், ஜார்ஜ் செல்வன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, பெஸ்கி, ரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×