என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை-அவிநாசி ரோடு உயர்மட்ட மேம்பாலத்தில் ஓடுதளம் அமைக்கும் பணி தீவிரம்

- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
- ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.
பீளமேடு,
கோவை அவிநாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறு வழி சாலகயாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. கடந்த 2020-ம்ஆண்டு முதல் இந்த பணியானது நடந்து வருகிறது.
பாலபணிகள் முடிவு பெற்றால் விமான நிலையம் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மிக எளிதாக கோவை நகரை கடந்து செல்ல முடியும்.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ் , விமான நிலைய சித்ரா சந்திப்பு ஆகிய 4 இடங்களில் இறங்கு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சில இடங்களில் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தாங்கு தூண்கள் அமைக்கும் பணி தாமதமானது.
தற்போது அந்தப் பணிகளும் முடிக்கு விடப்பட்டு முழுவதும் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.
அதேபோல லட்சுமி மில் சிக்னல் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கப்பட்டு முடிவு பெற்றது. இத்திட்டம் 2024 ல் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
4 வழி பாதையாக உயர் மட்ட பணிகள் நடைபெறுவதால் கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியமான பயனாக இந்த பாலம் அமையும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.