என் மலர்
உள்ளூர் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- அதி வேகமாக செல்லும் வாகனத்தால் விபத்து ஏற்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தங்கத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.
மாநிலத் துணைச் செயலாளர் ராஜாராமன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ஜெயசங்கர் மாவட்ட ஆட்சி மன்ற குழு அமைப்பாளர் அன்வர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செல்வமுத்து குமணன் வரவேற்றார்.
சிறப்புரையாக பட்டிம ன்றம் நடுவர் சரவணன், முனைவர் தனவேலன், முருகானந்தம், மாவட்ட செயலாளர் கனகசபை, ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி விளக்கி கூறினர்.
கருத்தரங்கில் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை செல்லும் சிலர் அதி வேகமாக வாகனங்களை இயக்கி சாலையில் செல்லும் பொது மக்கள் மாணவ மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்கள் மீது வாகனத்தை பரிமுதல் செய்து சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மாவட்ட கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது.
அதனை சீரமைத்து தர வேண்டும்.
மயிலாடு நகராட்சி நகர பகுதிகளில் பாதாள சாக்கடை பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலிய மூர்த்தி, சுவாமிநாதன், தர்மரா ஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.