search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: 1 மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும்  வீராணம் ஏரி
    X

    கடந்த 1 மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் வீராணம் ஏரியை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: 1 மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் வீராணம் ஏரி

    • தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 மாதமாக முழு கொள்ளளவில் வீராணம் ஏரி நீடிக்கிறது.
    • கடந்த மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இதன் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீஅகலமும் கொண்டதாகும். ஏரிமூலம் 44 ஆயிரத்து 850 ஏக்கர்பாசனம் பெறுகிறது. சென்னைகுடிநீருக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வருகிறது. மழைக் காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில்பெய்யும் மழை தண்ணீர் செங்கால்ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம்ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கடந்தமாதம் 27-ந் தேதி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டது.

    நீர்வளத்துறை அதிகாரிக ள்பூதங்குடி பகுதியில் உள்ள ஏரியின்வடிகால் மதகான விஎன்எஸ்எஸ்வழியாக வெள்ளா ற்றில் உபரி தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து ஏரியின் மட்டத்தைஅதன் முழு கொள்ளளவான 47.50அடியில் வைத்து நீர்வளத்துறைஅதிகாரிகள் பராமரித்து வந்தனர். தற்போது ஏரிக்கு வடவாறுவழியாக விநாடிக்கு 502 கன அடி வந்துகொண்டிருக்கிறது. சென்னைக்கு விநாடிக்கு 64 கன அடி தண்ணீர்அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஏரி முழுகொள்ளளவில் உள்ளதால் ஏரியை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×