என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் பேரட்டியில் அவசரகதியில் போடப்பட்ட சாலையால் சர்ச்சை

- 6 மணி நேரத்தில் தரமற்ற சாலை போட்டதாக குற்றச்சாட்டு
- அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேரட்டி ஊராட்சி. இந்த பஞ்சாயத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
சம்பவத்தன்று பேரட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து 600 மீட்டருக்கு தார் சாலை 6 மணி நேரத்தில் போடப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள எந்த திட்டத்தின் கீழ் இருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இச்சாலை பணி மேற்கொள்வது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல ஆண்டுகளாக இச்சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஆனால் திடீரென எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் ஆறு மணி நேரத்தில் தூரத்திற்கு அவசர கதியில் தரமற்ற சாலை போடப்ப ட்டுள்ளதால் பொதுமக்க ளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடு க்க வேண்டும் என கூறினர்.