என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் வேதனை தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் வேதனை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1943141-2.webp)
தண்ணீரின்றி கருகிய பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.
தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் வேதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- செம்பனேரி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பயிர்கள் கருக தொடங்கின.
நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.
ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகினர்.
குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.
மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.
எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.
உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.