என் மலர்
உள்ளூர் செய்திகள்
பூலாம்பட்டி காவிரியில் மூதாட்டி பிணம்
- விசைப்படகு துறை பகுதியில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில் இரவு 8 மணி அளவில், அங்கிருந்த விசைப்படகு ஓட்டுநரை அணுகிய அந்த மூதாட்டி, தான் மறுகரைக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள விசைப்படகு துறை பகுதியில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
அவர், தான் சங்ககிரி பகுதியில் இருந்து வந்து இருப்பதாகவும் ஆற்றின் மறு கரையில் உள்ள நெறிஞ்சிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு 8 மணி அளவில், அங்கிருந்த விசைப்படகு ஓட்டுநரை அணுகிய அந்த மூதாட்டி, தான் மறுகரைக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விசைப்படகு ஓட்டுநர், மீண்டும் காலையில் தான் இனி விசைப்படகு போக்குவரத்து நடைபெறும் என கூறியுள்ளார். இதன் பின்னரும் மூதாட்டி தொடர்ந்து அந்த பகுதியிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பூலாம்பட்டி படகு துறை பகுதியில் அந்த மூதாட்டி காவிரி ஆற்றில் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் சங்ககிரி பகுதியில் இருந்து வந்ததாக கூறியதை அடுத்து போலீசார் சங்ககிரி சுற்றுவட்டார பகுதியில் சம்பந்தப்பட்ட பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.