என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

- எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளை சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நெல்லை:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்து மத்திய- மாநில அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்கள் மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும், கலவரத்துக்கு துணை போகும் மாநில அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராம், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், பகுஜன் சமாஜ் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேகர், தென்காசி மாவட்ட தலைவர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.