search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு இருக்கை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்- 11 பேர் கைது
    X

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு இருக்கை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்- 11 பேர் கைது

    • ரெயில் நிலைய பழைய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் இருப்பதாக பயணிகள் அச்சப்படுகின்றனர்.
    • சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரூ.5-க்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் இருக்கை இல்லாததால் தரையில் அமர்ந்து இருப்பதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் தெரி வித்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் மாலைமலரில் கடந்த 28-ந் தேதி செய்தி வெளியானது.

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    இந்நிலையில் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு இருக்கை அமைத்து தர ரெயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும், சந்திப்பு ரெயில் நிலைய பகுதியில் இருந்து ஸ்ரீபுரம் செல்லும் வழியில் மேம்பாலத்தில் உள்ள நடைபாதை படிக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும், ரெயில் நிலைய பழைய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த வண்ணம் இருப்பதாக பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அதனையும் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரூ.5-க்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படாமல் பயணிகள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது.

    இது மிகவும் கண்டிக்கத் தக்கது என்று கூறியும் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்க லிங்ககுமார், மாவட்ட பொதுச்செய லாளர் மகேந்திர பாண்டி யன், மாவட்ட துணைத்தலைவர் மணி, வண்ணை சுப்பிர மணியன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, அபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×