என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல் அறுவடை இயந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம்- கலெக்டர் தகவல்
- வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
- கூடுதல் வாடகை கேட்டால் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
காஞ்சிபுரம்:
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் 17-2-2023 அன்று காஞ்சிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் நெல் அறுவடை இயந்திரம். பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2600/- மற்றும் டயர் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1850/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் நெல் அறுவை இயந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்த பெல்ட் டைப் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880-ம் டயர் டைப் இயந்திரத்திற்கு ரூ.1160-ம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆகவே அரசு நெல் அறுவடை இயந்திரம் மற்றும் 65 தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விவரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அதற்கான வாடகை தொகையினை செலுத்தி அரசு மற்றும் தனியார் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலிப்பது குறித்து கீழ்க்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
1. செயற்பொறியாளர். (வே.பொ.து). நத்தனம். சென்னை-35, தொலைபேசி எண்: 044-24327238, 9952952253
2. உதவி செயற்பொறியாளர் (வே.பொ.து) காஞ்சிபுரம், தொலைபேசி எண்: 044 - 27230110, 90030 90440